ETV Bharat / bharat

'ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்'- நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்

பாட்னா: பிகார் மாநிலத்தில், கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ள காங்கிரஸ், நிதிஷ் குமார் ராஜதர்மத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Prem Chandra mishra  Bihar CM Nitish Kumar  JDU bihar  bihar congress  BJP rajdharma  COVID-19 in bihar  Nitish Kumar discuss with Oppn over COVID-19  பிகார் கரோனா நிலவரம்  நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் கண்டனம்  ராஜதர்மம், காங்கிரஸ், அறிவுறுத்தல்

author img

By

Published : May 12, 2020, 7:41 PM IST

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், பிகார் சட்டப்பேரவையின் மேல்சபை உறுப்பினருமான பிரேம் சந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மாநிலத்தில் கரோனா தீ நுண்மி (வைரஸ்) பாதிப்பு குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. நெருக்கடியான இந்த நேரத்தில், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஜே.டி.யு (ஒருங்கிணைந்த ஜனதா தளம்) கட்சி உறுப்பினராகப் பணியாற்றாமல், முதலமைச்சராகப் பணியாற்ற நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்.

இதில் ராஜதர்மத்தை கடைபிடியுங்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இதுகுறித்து பேசாதவரை, இந்த விஷயத்தைப் பற்றி தெளிவான விளக்கப்படத்தை அவரால் பெற முடியாது. மொத்தம் 106 எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்.

நாங்களும் பலமாக உள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை நான் உறுதியாக அறிவுறுத்துகிறேன்.

மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அடிப்படை வசதிகள் இல்லாதவைகளாக உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்வதிலும், அவர்களுக்குப் போதுமான சேவைகளை வழங்குவதிலும் பிகார் அரசு ஒவ்வொரு முன் நடவடிக்கைகளிலும் தோல்வியடைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்க மறுப்பதிலும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குள் ஊடகங்கள் செல்வதைத் தடுப்பதும், சந்தேகத்திற்குரிய வகையில் அமைந்துள்ளது. மேலும், ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் தடைகளை நிதிஷ் குமார் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என்றார்.

பிகார் மாநிரத்தில் 707 பேர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'செயல் திட்டம் இல்லை, தேர்தலில் மட்டுமே கவனம்'- விஜயனை வறுத்தெடுக்கும் காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.