உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நாட்டுப்புற பாடகி சுஷ்மா (22) அக்டோபர் 1ஆம் தேதி இரவு கிரேட்டர் நொய்டாவில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து காவல் துறை தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டுவந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று பாடகி சுஷ்மாவின் நேரடி பங்குதாரரான கஜேந்திர பாட்டி, புலந்த்ஷாரைச் சேர்ந்த முகேஷ், கௌதம் புத் நகரைச் சேர்ந்த சந்தீப் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ஒரு சொகுசுக் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : வாழ்க்கையில் தவறு செய்வது சகஜம்தான் - விருது வென்ற அமெரிக்க பாப் பாடகி பேச்சு