வட இந்தியாவில் நிலவும் கடும பனிமூட்டம் காரணமாக ரயில் பாதைகள் சரிவர தெரியவில்லை. இதனால் 17 ரயில்கள் தாமதாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
டாடா நகர் ஜம்மு - தவாய் முரி விரைவு ரயில், புனே - நிசாமுதின் விரைவு ரயில், திருவனந்தபுரம் - நிசாமுதின் விரைவு ரயில் அனைத்தும் 6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலஸ்பூர் - அமிர்தசரஸ் விரைவு ரயில் 5 மணி நேரம் தாமதமாகவும், கயா - டெல்லி புருஷோத்தம் விரைவு ரயில், இந்தோர் - டெல்லி விரைவு ரயில் ஆகியவை 4 மணி நேரம் தாமதமாகவும் புறப்படும் என தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 21.6 செல்சியஸ் வெப்பநிலை ஆகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முதல் ஜம்மு, காஷ்மீர், உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தியாவின் தலைநகரம் மிகுந்த பனிமூட்டமாக உள்ளது. கடந்த வியாழக்கிழமை டெல்லி மற்றும் நொய்டா பகுதிகளில் அதிக மழையும், பனிமழையும் பெய்ததையடுத்து, தலைநகரில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.