ETV Bharat / bharat

'பொருளாதார தேக்க நிலையை கண்ட முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்' - சிதம்பரம் விமர்சனம் - காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம்

டெல்லி: 40 ஆண்டுகளில் முதல்முறையாக பொருளாதார தேக்க நிலையை கண்ட முதல் நிதியமைச்சர் என்ற தனித்தன்மையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சிதம்பரம்
சிதம்பரம்
author img

By

Published : Jan 29, 2021, 6:20 AM IST

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக பொருளாதார தேக்க நிலையை கண்ட முதல் நிதியமைச்சர் என்ற தனித்தன்மையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிதம்பரம் இது குறித்து கூறுகையில், "பிடிவாத குணத்திற்கும், பொருளாதார கொள்கைகளால் நிகழ்ந்த பேரழிவுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் பெயர் போனது பாஜக அரசு. நல்ல ஆலோசனைகளை கூட ஏற்று கொள்ளாமல் உள்ளது. இருப்பினும், மக்கள் முன்னிலையில் எங்களின் பார்வையை வைக்கிறோம்.

2020-21 பட்ஜெட் குறித்து பேசுவதில் எந்த பயனும் இல்லை. தொடக்கமே பேரழிவாக அமைந்தது. இறுதியும் மோசமாக அமையவுள்ளது. 2020-21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பொய்யாக திருத்தப்பட்ட மதிப்பீடுகளை நிதியமைச்சர் வழங்குவார் என்ற அச்சம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2021-22ஆம் ஆண்டுக்கு, மற்றவர்களை கவரும் வகையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முயல்வார்.

2020-21ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு பொய்யான தரவுகளை கொண்டே இருக்கும். அடுத்தாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ஒரு மந்திரவாதியின் மாயை போல கட்டமைக்கப்படவுள்ளது. ஏழு ஆண்டு கால மோடியின் ஆட்சி, பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. வளர்ச்சியை மட்டுப்படுத்தியுள்ளது. 2004 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தை பொற்காலம் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

சிதம்பரம்

அதற்கு நேர் எதிராக, 2014-20 காலம் பொருளாதாரம் மந்தம் அடைவது மட்டுமல்லாமல் கீழே குழி தொண்டி புதைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதியம், உலக வங்கி வெளியிட்ட தரவுகளை பயன்படுத்தி ப்ரூக்கிங்ஸ் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் நமக்கு அவமானமாக இருந்தது. ஆனால், ஆச்சரியப்படுத்தும் விதமாக அமையவில்லை. இந்தியாவில் ஏழ்மை பெரிய அளவில் அதிகரிக்கவுள்ளது. நைஜீரியாவை காட்டிலும் ஏழை மக்களின் எண்ணிக்கை உயரவுள்ளது. ஏழாண்டு கால முடிவுல் மோடி செய்த சாதனை இதுவே ஆகும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.