கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பேருந்து, ரயில், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு, பகல் பாராது தேசிய பேரிடர் பாதுகாப்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த களநிலவரம் பின்வருமாறு:
கோழிக்கோடு
’குட்டியாடி’ ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றிற்கு அருகேயுள்ள மக்களை இடம்பெயருமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வயநாடு
வயநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், நிலச்சரிவாலும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மலப்புரம்
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர்
மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.