கர்நாடக-ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.