உத்தர பிரதேசம் மாநிலம் எட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகமான முறையில் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த அம்மாநில காவல்துறையினர், உயிரிழந்த ஐந்து பேரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அலுவலர் சுனில் குமார் சிங், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மரணத்துக்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.