கரோனா தொற்று காரணமாக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கால் ஈரானில் உணவும் உறைவிடமும் இன்றி தெருவோரத்தில் பட்டினியால் தவிக்கும் 44 தமிழ்நாடு மீனவர்களை தாயகம் மீட்டுவர வலியுறுத்தி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர் விடுதலை வேங்கைகள் மாநிலத் தலைவர் மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.