ETV Bharat / bharat

மத்தியப் பிரதேசத்தில் எல்பிஜி சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற டிரக்கில் தீ விபத்து! - ஹோஷங்காபாத் அருகே எல்பிஜி சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற டிரக்கில் தீ விபத்து

போபால் : எல்பிஜி சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற டிரக்கில் இன்று அதிகாலை தீப்பற்றி, சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துச் சிதறின.

fire
fire
author img

By

Published : Sep 29, 2020, 9:41 PM IST

மத்தியப் பிரதேசம், ஹோஷங்காபாத்தின் அருகே சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் டிரக் ஓட்டுநர், க்ளீனர் இருவரும் தப்பியோடி விட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த டிரக் போபாலில் இருந்து பைபாரியாவிற்கு புறப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில், டிரக்கில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் சுற்றியிருந்த வயல்வெளிகளில் சிதறி விழுந்து ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துள்ளன. ஆனால், இதில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், தப்பியோடிய ஓட்டுநர், க்ளீனரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.