சண்டிகர் - கொச்சுவேலி விரைவு ரயில் இன்று வழக்கம்போல் டெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிறகு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![ரயிலில் ஏற்பட்ட தீ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4356693_948_4356693_1567770126108.png)