உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவிலுள்ள ஆணைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கைத்தொழில் துறை தளத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள நொய்டா ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நொய்டாவின் தலைமை நிர்வாக அலுவலர் ரித்து மகேஷ்வரி இந்த விசாரணைக்காக கூடுதல் தலைமை நிர்வாக அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
இதையும் படிங்க: வீடுகளுக்கே பழங்களை எடுத்துச் செல்லும் அஞ்சல் துறை!