ETV Bharat / bharat

ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு - டெல்லி கலவரம், ஆம் ஆத்மி, கவுன்சிலர்

டெல்லி காவலர்கள் ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹீர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

tahir hussain  chandbagh  FIR against AAP councillor Tahir Hussain for killing IB officer  ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு  தஹீர் உசேன்  டெல்லி கலவரம், ஆம் ஆத்மி, கவுன்சிலர்  FIR against AAP councillor Tahir Hussain for killing IB officer
FIR against AAP councillor Tahir Hussain for killing IB officer
author img

By

Published : Feb 28, 2020, 7:34 AM IST

டெல்லி கலவரத்தில் உளவுப்பிரிவு அலுவலர் அங்கித் சர்மா என்பவரும் கொல்லப்பட்டார். இவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும், இந்த கொலைக்கு பின்னால் ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹீர் உசேன் இருப்பதாகவும் சர்மாவின் தந்தை ரவீந்தர் குமார் குற்றஞ்சாட்டினார்.

சர்மாவின் தந்தையும் உளவுப்பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்கவர். இதற்கிடையில் காவலர்கள் தஹீருக்கு சொந்தமான கஜோரி காஸ் பகுதி தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து தஹீர் மீது டெல்லி காவலர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) மற்றும் 201 (ஆவணங்களை அழித்தல்) உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரின் தொழிற்சாலை மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டது.

அங்கித் சர்மாவின் உடலில் பல்வேறு இடங்களில் கல்லெறி காயங்கள் காணப்பட்டன. சாக்கடையில் வீசப்பட்ட அவரது உடலை காவலர்கள் கலவரம் ஓய்ந்த மறுநாள் கண்டெடுத்தனர். டெல்லி கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் காவலர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பெற்ற பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.