ETV Bharat / bharat

அவசர நிதி ரூ.1.7 லட்சம் கோடி: 80 கோடி ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம்

author img

By

Published : Mar 26, 2020, 2:46 PM IST

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைச் சமாளிக்க 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு அவசர கால சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

கரோனா பாதிப்பால் நாட்டில் உள்ள அசாதாரண நிலையை சமாளிக்கும்விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய நிதி அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கிய அறிவிப்புகள்:

  • சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு
  • ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசம்.
  • உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள், இடம்பெயர்ந்தோர்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • யாரும் பசி, பட்டினியோடு இருந்துவிடக் கூடாது என்பதற்காக உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கிலேயே வழங்கப்படும், வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டங்களின் அடிப்படையில், பொருள்கள் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்
  • முறைசாரா தொழிலாளர்களுக்கு, இரண்டாயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும், இதன்மூலம் ஐந்து கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும்.
  • 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு
  • விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின்கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும், 8.69 கோடி விவசாயிகள் இதன்மூலம் நேரடியாகப் பயன்பெறுவர்.
  • விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்
  • 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின்கீழ், மாதந்தோறும் 500 ரூபாய் என அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்
  • உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு உருளை வழங்கப்படும்
  • 100 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில், ரூ.15000-க்கும் கீழ் 90 விழுக்காட்டினர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்கு அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 24 விழுக்காடு நிதியை அரசு செலுத்தும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.