ETV Bharat / bharat

எங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும் - இந்திய விவசாயிகள் சங்கம் - farmers struggle will continue until our demand is met

டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

farmers struggle will continue until our demand is met Indian Farmers Association
எங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும் - இந்திய விவசாயிகள் சங்கம்
author img

By

Published : Jan 12, 2021, 10:37 PM IST

மூன்று சட்டங்கள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, உழவர்களுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 48 நாள்களாகத் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வீரியமடைந்துவரும் போராட்டம்

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு இன்றுவரை எட்ட முடியவில்லை. விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்துகொண்டே வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்மனுவில், “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் நெடுஞ்சாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் கோவிட்-19 பாதிப்பாளர் எண்ணிக்கை உயர்ந்துவரும் சூழலில், டெல்லி போராட்டக்களத்தில் கூட்டம் கூடிக்கொண்டே இருப்பதால் தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும் - இந்திய விவசாயிகள் சங்கம்
எங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும் - இந்திய விவசாயிகள் சங்கம்

நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு

இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (ஜன.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம்,“ வழக்கு தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என இடைக்கால உத்தரவிட்டது.

குழுவின் நான்கு உறுப்பினர்கள்

பூபிந்தர் சிங் மன் - பாரதிய கிசான் யூனியன் உறுப்பினர்

பிரமோத் குமார் ஜோஷி - சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான முன்னாள் இயக்குநர்

அசோக் குலாட் - இந்திய பொருளாதார உறவுகளுக்கான கவுன்சிலின் இன்ஃபோசிஸ் இருக்கைக்கான பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.

அனில் தன்வந்த் - ஷேத்காரி சங்கதன் வேளாண் தொடர்புடைய அமைப்பின் தலைவராக இருப்பவர் ( மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்ற அமைப்பு)

இந்த குழுவானது, மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு, விவசாய அமைப்புகள் ஆகிய இருதரப்பினரிடமும் கலந்துரையாடி அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். அக்குழு அளிக்கும் அறிக்கையை கொண்டு இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படுமென உச்ச நீதிமன்ற தெரிவித்துள்ளது.

விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள்

இரு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுடன் நடந்த 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று கூறிய மத்திய அரசு, தேவைப்பட்டால் அது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என்று விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தது. அப்போது, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு - விவசாயிகள் கருத்துகள்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய விவசாயிகள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், "விவசாயிகளின் கோரிக்கையின் நியாயங்களுக்கு செவிமடுத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் கோரிக்கை, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இந்த மிகப்பெரிய இயக்கம் நடந்து வருகிறது. எனவே, எங்களுடைய கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும். இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஆராய்ந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு மத்திய அரசு வரவேற்றுள்ளது. அதே நேரத்தில், தற்போது உச்ச நீதிமன்றமே வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆராய குழு அமைத்திருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் பெரும்பான்மையான விவசாயிகள் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.