கொய்யா இலைகளை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொறித்து எடுக்கும் பஜ்ஜிகளை சர்க்கரை நோயாளிக்காக பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள். ஆனால் கொய்யாவில் பஜ்ஜி செய்து புதுச்சேரியில் பெண் விவசாயி ஒருவர் செய்துள்ளார்..
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி. பத்மஸ்ரீ விருது வென்றுள்ள இவரது மகள் ஸ்ரீலட்சுமிக்கு விவசாயத்தில் அதிக நாட்டமுண்டு. இதனால் தன் வீட்டில் கொய்யாவில் அதிக மகசூல் கிடைக்க கூடிய பல ரகங்களை உற்பத்தி செய்துவருகிறார். நல்ல லாபம் தரும் கொய்யாவை பயிரிட விவசாயிகளுக்கு ஆலோசனையும் வழங்கிவரும் இவர், குறைந்த விலையில் கொய்யா கன்றுகளையும் விற்றுவருகிறார்.
தற்போது கரோனா ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கிய பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொய்யாவை பயன்படுத்தி புதிய வகையில் சில ரெசிப்பிகளையும் தயாரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது, “கொய்யா பொறியல் வழக்கமான உருளை கிழங்கு பொறியலைபோல்தான் செய்யவேண்டும். கொய்யாவை விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கொய்யா பஜ்ஜிக்கு உருளைக் கிழங்கைபோல் கொய்யாவை மெலிதாக வட்ட வடிவில் நறுக்கி, மாவில் நனைத்து எண்ணையில் போட்டு எடுத்தால் போதும். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்” என்கிறார் ஸ்ரீலட்சுமி.
இதையும் படிங்க: ஜன்னல் பஜ்ஜி கடையின் உரிமையாளர் கரோனாவால் உயிரிழப்பு!