ஒடிசாவின் கியோன்ஜாரில் இன்றளவும் பல கிராமங்களுக்கு சரியான சாலை வசதியில்லை. இதனால், அம்மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு செல்ல பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நந்தனி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து, அந்த கர்ப்பிணியை கட்டிலில் வைத்து மருத்துவமனைக்க்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
சுமார் நான்கு கிலோ மீட்டர் அந்த கர்ப்பிணியை கட்டிலில் வைத்து தூக்கிச் சென்று, பின்னர் ஒரு கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருந்தபோதிலும், அந்த பெண்ணுக்கு தற்போதுவரை குழந்தை பிறக்கவில்லை. இன்றளவும் இது போன்ற அவலம் பல மாநிலங்களில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க...தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: மருத்துவமனையில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் நாய்கள்...!