மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.ஐ.க்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. தேர்தலில் வாக்காளராக தங்களை பதிவு செய்துகொள்ள eci.gov.in என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளுங்கள் என்று அந்த போலி செய்தி பரவிவருகிறது.
இந்த போலி செய்தியை பற்றி தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்ஹலி ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். இணையத்தில் பதிவு செய்ய விரும்பும் வாக்காளர்கள் http://nvsp.in என்ற தளத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியுமென்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் அடையாள ஆவணமாக தங்களின் கடவுச்சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்வதை தவிர்த்து ஆன்லைன் மூலம் எந்த வாக்காளருக்கும் வாக்குப்பதிவிட அனுமதி கிடையாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பரவிவரும் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.