சீனாவிலிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் கொரோனா தொற்றுநோய் பரவியது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனிடையே, சமூக வலைதளங்களில் கொரோனா குறித்து போலியாகச் சித்திரிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கேட்பொலிகள் (ஆடியோ) வலம்வருகின்றன.
இது குறித்து, இந்தியா ராணுவ அலுவலர்கள், “பதற்றத்தை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் போலியான ஆடியோக்கள் பகிரப்படுகின்றன. அதனை நம்பி மக்கள் பதற்றமடையாமல், அமைதியாக இருங்கள். மத்திய சுகாதாரத் துறையின் அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுங்கள். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுடன் போராடுவோம். பதற்றத்திற்கு நோ, முன்னெச்சரிக்கைக்கு எஸ் என்று கூறுங்கள்” என அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இந்தியாவில் 111 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என அறிவித்ததையடுத்து இத்தகவல்கள் பரவியுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த முதியவர் உயிரிழப்பு!