மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் மூன்று பேர் அடையாளம் தெரியாத கும்பலால் கடந்த வியாழக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் பல்கர் பகுதியைச் சேர்ந்த சிக்னே மகாராஜ் கல்பவ்ருக்ஷகிரி (70), சுஷில்கிரி மகாராஜ் (35), மற்றும் கார் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்கர் பகுதியை கடந்துச் செல்லும் போது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசை தாக்கி பேசிய அவர், பல்கர் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் கொடூரமானது என்றும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தாக்குதல் நடத்திய கும்பல் சட்டத்தை கையில் எடுத்துச் செயல்பட்டதை விட வெட்கக்கேடானது எதுவும் இல்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: கணவருக்கு வீடியோ காலில் இறுதி அஞ்சலி செலுத்திய பெண்