நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மே மாதம் 30ஆம் தேதி பிரதமர், அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். சுப்பிரமணியம் ஜெயசங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் உறுப்பினர் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சாரானால் ஆறு மாதத்தில் எதாவது ஒரு அவையில் உறுப்பினராக வேண்டும்.
அந்த வகையில், ஜெய்சங்கரை எம்.பி ஆக்குவதற்காக குஜராத்தின் மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.