ETV Bharat / bharat

குடிபெயர் தொழிலாளர்களை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்குதான் உள்ளது - பொருளாதார நிபுணர் ஜேன் ட்ரூஸ் - தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத் திட்டம்

கரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் நிலவிவரும் உணவு நெருக்கடி, குடிபெயர் தொழிலாளர் சிக்கல் குறித்து பொருளாதார நிபுணர் ஜேன் ட்ரூஸ் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலின் தமிழாக்கம்

Jane Dreze
Jane Dreze
author img

By

Published : May 24, 2020, 12:26 PM IST

கேள்வி: லாக்டவுனுக்கு பிறகு, இந்தியாவில் ஏற்பட்ட உணவு நெருக்கடியின் தாக்கம் என்னென்ன?

ஜேன் ட்ரூஸ்: பொது விநியோக அமைப்பு எனப்படும் நியாய விலைக் கடை மூலம் பசியை வெகுவான அளவில் தடுக்க முடியும். மூன்று மாதங்களுக்கு மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை இருமடங்காகத் தருவதாக மத்திய அரசின் முடிவு ஒரு நல்ல நடவடிக்கையாகும். ஆனால் ரேஷன் திட்டத்துக்கு வெளியே 50 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்த நோய்தொற்றுக்குப்பின் வறுமைக் கோட்டுக்குக் கீழே வரக்கூடும்.

ஜார்க்கண்டில் போன்ற மாநிலங்களில் ரேஷன் கார்டுகள் இல்லாத ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் உள்ளனர். எனவே, உணவு நெருக்கடியின் அளவைக் கணக்கிடுவது கடினம். ஆனால், முடிந்த வரை அவர்களின் அளவீடு கணக்கிடப்பட்டு FCI மூலம் உணவு வழங்குவதை உறுதிசெய்யத் திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி: இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனவா?

ஜேன் ட்ரூஸ்: மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உரிய ஆதரவு கரத்தை மத்திய அரசு நீட்டுவதன் மூலம் நிலமை சீராகும். மத்திய அரசு தேவையான உணவு தாணிய பங்கை மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டும், ரேஷன் அட்டை அல்லாதவர்களுக்கும் முறையான உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும். வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளதால், மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பொது விநியோகத் திட்டம், ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஏழைகளுக்கு தற்போதைய நெருக்கடியை சமாளிக்க உதவும். பொது சமையலறைகளை அமைத்தல், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துதல் போன்ற நலத்திட்ட நடவடிக்கைகள் இக்காலத்தில் பேருதவியாக இருக்கும். மேற்கண்ட நலத்திட்டங்களை இன்னும் திறம்பட செயல்படுத்துவது அவசியமாகும்.

கேள்வி: நவீன இந்திய வரலாற்றில் இதுபோன்ற உணவு நெருக்கடி இவ்வளவு கடுமையானதாக உள்ளதா?

ஜேன் ட்ரூஸ்: சுதந்திரத்திற்கு முன்னர், வங்காள பஞ்சத்தை இந்தியா கண்டது, இது இப்போது நாம் காணும் விட மோசமாக இருந்தது. அதன்பிறகு, தொடர் பருவமழை பொய்ப்பின் காரணமாக பஞ்சம், உணவு பற்றாக்குறை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. 1966-67ஆம் காலகட்டத்தில், பிகாரில் பெரும் வறட்சி ஏற்பட்டது. ஆனால் மேற்கண்ட நெருக்கடியைக் காட்டிலும், தற்போதைய உணவு நெருக்கடி நாம் இதுவரைக் கண்டிராத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.

கேள்வி: குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வெளியேற்றத்தை கையாள்வதில் அரசு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் நிலையில், இந்த பிரச்னைக்கான காரணம் என்ன?

ஜேன் ட்ரூஸ்: குடிபெயர் தொழிலாளர்கள் மீது அரசுகள் தொடர்ச்சியாக கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டுவருகின்றன. இத்தகைய நேரத்தில், ஆயிரக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்கள் பலநூறு மையில்கள் கால்நடையாக பயணம் மேற்கொள்ளும் அவலம் அரங்கேறிவருகிறது. தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு உரிய உணவு, குடிநீர், உறைவிடமின்றி தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் காட்சிகளை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். இந்த நெருக்கடியில் அவர்களுக்கு அரசு இயன்ற உதவி செய்யத் தவறிவிட்டது. அவர்கள் படுகுழியில் விழுவதை நாம் தடுக்கத் தவறிவிட்டோம்.

கேள்வி: இந்தியா கடுமையான ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்கொள்ளப்போகிறதா?

ஜேன் ட்ரூஸ்: நிச்சயமாக இந்திய இந்தச் சிக்கலை எதிர்கொள்ளப்போகிறது. உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொதுவிநியோகத்திட்டம் ஆகியவை இருந்தபோதிலும் பெரும்பாலான மக்களுக்கு எந்தவிதமான ஊட்டச்சத்து பாதுகாப்பும் இல்லை. வயிறு நிரம்பவது மட்டுமே ஊட்டச்சத்துக்கான ஒரே அளவுகோல் அல்ல. நல்ல ஊட்டச்சத்தில் சரியான உணவு பழக்கம், தரமான உணவு மற்றும் நீர் ஆகியவைும் அடங்கும். இந்திய ஏழைகளுக்கு இவை எதுவும் கிடைப்பதில்லை. தற்போதைய லாக்டவுன் அவர்களின் துயரங்களை மேலும் அதிகரித்துள்ளது. அரசின் நிதி மோசமடைந்துவரும் நிலையில், இவர்களின் துயர் மேலும் மோசமடையும்.

கேள்வி: வரும் நாட்களில், குடிபெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் மாநிலங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமா? ஏதேனும் முயற்சிகள் நடைபெறுகிறதா?

ஜேன் ட்ரூஸ்: பெருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு, கூடுதல் உதவி தேவை. அவை கடுமையாக சேதத்தை சந்தித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களின் உழைப்பால் பல நிறுவனங்கள் பயனடைந்துள்ளன, ஆனால் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலில் இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களை கைவிட்டன. மத்திய அரசு ஆதரவு இல்லாமல், இந்த மாநிலங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு உதவ முடியாது. எனவே, குடிபெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதில் மத்திய அரசுதான் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இதையும் படிங்க: வேளாண் சட்ட திருத்தங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன - விவசாய பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.