புதுச்சேரி சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவில்லை. பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தத் தீர்மானத்திற்காகப் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்தாலும் கவலை இல்லை. மக்களுக்கான ஆட்சி இது. புதுச்சேரி மக்களுக்கு ஆளுநர் துரோகம் செய்யும் வகையில் செயல்படுகிறார்” என்றார்.
இதையும் படிங்க: 'வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசுகிறார் நாராயணசாமி' - ரங்கசாமி சாடல்