ETV Bharat / bharat

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: ஈடிவி பாரத் செய்தியாளரைத் தாக்கிய காவல் துறை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஐந்தாம்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், வாக்குப்பதிவு குறித்த செய்தி சேகரிக்கும் பணியில் இருந்து ஈடிவி பாரத் செய்தியாளர் உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்
காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்
author img

By

Published : Dec 10, 2020, 1:50 PM IST

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி 37 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் குறித்த செய்திகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈடிவி பாரத் செய்தியாளர் உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களை காவல் துறையினர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நமது ஈடிவி பாரத்தின் காஷ்மீர் - அனந்த்நாக் செய்தியாளர் ஃபயாஸ் அஹ்மத் லோலு கூறுகையில், "செய்தியாளராக நான், முடசிர் காத்ரி (நியூஸ் 18), ஜுனைத் ரபீக் (பஞ்சாப் கேசரி) ஆகியோர் எங்கள் கடமையை செய்துகொண்டிருந்தபோது, காவல் துறையினர் எங்களைத் தாக்கினர்.

குப்கர் பிரகடனத்திற்கான உள்ளூர் மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வேட்பாளரின் பைட்டை எடுத்துக்கொண்டேன், அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறிக்கொண்டிருந்தார். அதிகாரப்பூர்வ பதிப்பிற்காக நான் போலீஸை தொடர்புகொண்டபோது, ​​நாங்கள் அவர்களால் தாக்கப்பட்டோம். எங்கள் உபகரணங்களையும் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

இங்கிருக்கும் பிபில்ஸ் அலையன்ஸ் ஃபார் குப்தர் டிக்லரேஷன் (Peoples Alliance for Gupkar Declaration) கட்சியின் வேட்பாளர், காவல் துறையினர் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர். இது குறித்து காவல் துறையினரிடம் கருத்து கேட்க அவர்களிடம் சென்றபோது, அவர்கள் எங்களை கொடூரமாக தாக்கினார்கள். மேலும், அவர்கள் எங்கள் உபகரணங்களையும் பறிமுதல்செய்தனர்.

காவல் துறையினரின் இந்தக் கொடூர தாக்குதலில் ஜுனைத் ரபீக் மயக்கமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றார்.

மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் அனந்த்நாக் சந்தீப் சவுத்ரி, துணை ஆணையர் அனந்த்நாக் கே.கே. சித்தா ஆகியோரைத் தொடர்புகொள்ள ஈடிவி பாரத் பலமுறை முயற்சித்த போதிலும், அவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி விஜய் குமார் உறுதியளித்தார்.

செய்தியாளர்கள் மீது நடைபெற்றுள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு காஷ்மீர் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தச் சம்பவம் தீவினையானது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பத்திரிகை சுதந்திரத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அலுவலரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.