துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பணி புரிந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் பட் ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெரும் முயற்சிக்குப்பின் கமலேஷ் பட்டின் உடல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், கோவிட் -19 பெருந்தொற்று அச்சம் காரணமாக, இந்தியா கொண்டுவரப்பட்ட கமலேஷின் உடல் இந்தியாவிலிருந்து மீண்டும் துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக ஈடிவி பாரத் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. உயரிழந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தார், கோவிட்-19 பெருந்தொற்றால் அல்ல என்ற மருத்துவ ஆதாரத்தை ஈடிவி பாரத் வெளியுறவுத்துறையின் பார்வைக்கு முன் வைத்தது.
இதையடுத்து, கமலேஷ் பட்டின் உடலை இந்தியா வரவைத்து அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழை வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் தற்போது உடலை குடும்பத்தினர் பெற அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால், கமலேஷ் பட் குடும்பத்தினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!