ETV Bharat / bharat

தொழிலாளர் பாதுகாப்பு முக்கியம் - மாயாவதி அறிவுறுத்தல்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 24 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் குடிபெயர்ந்தோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.

மாயாவதி
மாயாவதி
author img

By

Published : May 16, 2020, 2:38 PM IST

உத்தர பிரதேச மாநிலம் அவுரியாவில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லாரியில் சென்றவர்கள் பெரும்பாலானோர் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தனது ஆதங்கத்தை உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிய நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெருநகரங்களில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு, பலநூறு மைல்கள் நடந்துச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, தொழிலாளர்கள் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தர பிரதேச தொழிலாளர்களின் பாதுகாப்பை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதிபடுத்த வேண்டும் என மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... வாகனமும் கிடைக்கல' - களத்தில் இறங்கிய சிறுவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.