ETV Bharat / bharat

விளிம்புநிலை மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித்தர ஆங்கில வழிக்கல்வி அவசியம்! - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

டெல்லி : ஆங்கில வழிக் கல்வி வழங்குவதன் மூலமாகவே விளிம்புநிலை மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியுமென ஆந்திரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

விளிம்புநிலை மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித்தர ஆங்கில வழிக்கல்வி அவசியம்!

author img

By

Published : Oct 7, 2020, 6:49 PM IST

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின் தனது தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறார்.

அந்த வகையில், அம்மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை ஒன்றை வெளியிட்டார்.

ஆந்திர அரசு நடத்திய கருத்துக் கணிப்பில் மாநிலம் முழுவதும் உள்ள ஏறத்தாழ 96.17% பெற்றோர்கள் இதற்கு ஆதரவளித்தனர்.

பெற்றோர்களின் ஆதரவோடு ஆங்கிலத்தை முதன்மையாகவும், அதே நேரத்தில் தெலுங்கு/ உருது கட்டாய மொழி பாடமாக பயிற்றுவிக்கவும் அரசு ஏற்பாடுகளைச் செய்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அம்மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் அரசின் முன்னெடுப்புக்குத் தடைவிதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திரப் பிரதேச அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கானது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திரப் பிரதேச அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.வி விஸ்வநாதன், "ஆங்கில வழிக் கல்வி கற்பித்தல் மூலமாக ஏழை எளிய விளிம்புநிலை மாணவர்களுக்கு அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அளிக்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்க முடியும்.

அரசு நடத்தும் தெலுங்கு நடுநிலைப் பள்ளிகளுக்கான இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தினால் சமூகத்தின் பலவீனமான அடுக்குகளில் இருந்து வரும் மாணவர்களின் வாய்ப்புகள் முழுமையாக பறிக்கப்படும்.

குழந்தைகளின் கற்றல் மொழி ஆங்கிலமாக இருந்தால் மட்டுமே, அவர்கள் தனித்தீவுகளாக விலக்கி வைக்கப்பட மாட்டார்கள்.

சொந்த மொழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவ போக்குவரத்து வசதிகளுடன் மண்டலத் தலைமையகங்கள்தோறும் தெலுங்கு பள்ளிகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இது அரசியலமைப்பைப் பின்பற்றி எடுக்கப்பட்ட முற்போக்கான நடவடிக்கை" எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பின் சாரத்தை நீதிமன்றம் கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆங்கிலம் வழிக் கல்வி பயிற்றுவித்தல் மிக அவசியமானது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இதுதொடர்பான மேலதிக விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைப்பதாக தெரிவித்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.