ETV Bharat / bharat

ஊக்குவிப்பு முதல் வேலைவாய்ப்பு வரை - Encouragement to Employment ...

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மீட்பது முதல் மின் பகிர்மான நிறுவனங்களை வலுப்படுத்துவது வரை 15 துறைகளை மீட்டெடுப்பது குறித்து ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Modi
Modi
author img

By

Published : May 19, 2020, 7:24 PM IST

கரோனா வைரஸ் நோயால் இந்தியா ஆட்டம் கண்டுள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பாதிப்புக்குள்ளான துறைகளை மீட்கும் வகையில் இதுவரை அறிவித்திராத பிரமாண்ட திட்டங்களை பிரதமர் மோடி மே 12ஆம் தேதி வெளியிட்டார். 20 லட்சம் கோடி மதிப்பிலான அந்த திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 13ஆம் தேதி விவரித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மீட்பது முதல் மின் பகிர்மான நிறுவனங்களை வலுப்படுத்துவது வரை 15 துறைகளை மீட்டெடுப்பது குறித்து ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் ஆகியவை வெளியாட்களை நம்பி இல்லை என்பது கரோனா பேரழிவு நமக்கு கற்றுத் தந்த பாடம், தற்சார்பை நோக்கி இந்தியா பயணப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரமாண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திட்டத்தை கவனமாக செயல்படுத்தி அரசு தன் திறமையை நிரூபிக்க வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டே நாள்களில் பிரதான் மந்திரி கரிப் கல்யான் திட்டத்தின் கீழ் 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இது 0.8 விழுக்காடாகும்.

இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஆர். பி. ஐ. யின் இரு கொள்கை திட்டத்தின் மதிப்பு மூன்று விழுக்காடாகும். 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் என அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அது 10 விழுக்காடாகும். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பல நாடுகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பெரும் பகுதியை செலவழித்துள்ளது. ஜப்பான் 21.1 விழுக்காடு, அமெரிக்கா 13 விழுக்காடு, ஸ்வீடன் 12 விழுக்காடு, ஜெர்மனி 10.7 விழுக்காடு செலவழித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றை 100 விழுக்காடு அடைந்தால் மட்டுமே இந்த திட்டத்தை வெற்றிகரமானதாக நாம் கருதலாம்.

விவசாயத் துறையைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் நோயால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனை மீட்டெடுப்பதன் மூலம் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வளர்ச்சிக்கு பங்களிக்கும் அனைத்து துறைகளையும் ஊக்கப்படுத்த வேண்டும். இச்சூழலில் போக்குவரத்து மற்றும் உணவகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னுரிமை வழங்கி இதனை மீட்டெடுக்க வேண்டும். தேவையான அளவு உணவு இருப்பு உள்ளதால் நாட்டுக்கு அது நம்பிக்கை தருகிறது. விவசாயிகளிடமிருக்கும் உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்து ஏழை எளியவர்களுக்கு அதனை வழங்க வேண்டும்.

ஊழியர்களின் ஊதியத்தில் 80 விழுக்காட்டினை பிரட்டன் அரசு ஏற்கவுள்ளது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதில், பணிபுரிவோரின் ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். பணத்தை தேவையில்லாமல் செலவழிப்பதை அரசு தவிர்க்க வேண்டும். குறைந்த மதிப்பில் அதிக அளிவிலான பலன்களை மக்களிடம் கொண்டுச் சேர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நிபுணர்களின் அறிவுரைகளைக் கேட்டு அரசு இயந்திரத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

இதையும் படிங்க: 26 விஷால் மெகா மார்ட் கடைகளுடன் கைகோர்க்கும் ஃபிளிப்கார்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.