உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரிலுள்ள பிக்ரு கிராமத்திற்கு விகாஸ் துபே என்னும் ரவுடியை பிடிக்க காவல்துறையினர் சென்றனர். அப்போது, ரவுடிகள் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில், எட்டு காவலர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பின்பு அவர் நேற்று (ஜூலை 9) மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர், உஜ்ஜயினியிலிருந்து கான்பூருக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது அவரை அழைத்து வந்த வாகனம் விபத்தில் சிக்கியது.
இதனைப்பயன்படுத்தி விகாஸ் துபே தப்பியோட முயற்சி செய்தார். அப்போது, அவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: துபேவின் கூட்டாளிகளை தேடும் காவல்துறை!