வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியை அடுத்துள்ள எடிபோராவில் பிரிவினைவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து அப்பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு சோதனையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.
இதை எதிர்பாராத பிரிவினைவாதிகள் படைகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். பின்னர் இந்த தேடல் நடவடிக்கை இருதரப்பு மோதலாக மாறியது. துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அலுவலர் ஒருவர் படு காயமடைந்துள்ளதாகவும், 92 வீரர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு கூடுதல் படைகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது பதற்றமான அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ராணுவத்தால் மீட்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.