சத்தீஸ்கர் மாநிலம், காங்கர் மாவட்டத்தின் பிரதாப்பூர் வனப்பகுதியில் திடீரென்று குண்டு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு ஊடுருவிய நக்சல்கள் சிலர், எல்லைப் பாதுகாப்பு படையினரை ( Border security force) நோக்கி தூப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஸ்தர் காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறுகையில், "வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தப்பி ஓடிய நக்சல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
கடந்த மாதம், அம்மாநிலத்தின் மினப்பா காட்டில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு காட்சிகளை நக்சல்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகளவில் 84 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!