ETV Bharat / bharat

தேர்தல் நிதி பத்திரம்: நேர்மையான திட்டமும், நேர்மையற்ற நோக்கமும்.! - தேர்தல் நிதி பத்திரம் குறித்து பாஜக

தேர்தல் நிதி பத்திரங்கள் அரசியல் நிதியை சுத்தப்படுத்த வழங்கப்படுகிறதா அல்லது எதிர்கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையை தடுக்கும் கருவியா? என்பதை காணலாம்.

Electroral bonds:  An honest scheme with a dishonest intention

author img

By

Published : Nov 28, 2019, 6:14 PM IST

தேர்தல் நிதி பத்திரம்
தேர்தல் நிதி பத்திரங்கள் தற்காலிக சான்றிதழ் வடிவிலுள்ள பணம். ஒரு தனிநபர் அல்லது நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் இருந்து இதனை பெற்றுக் கொள்ளலாம். அதனை ஒரு கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கு மூலமாகவும், தேர்தல் நிதி பத்திரம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.
அண்மையில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சிகள் இதனை பெற தகுதியுடையவை. தேர்தல் நிதி பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் ரகசிய பாதுகாப்பை வழங்குகின்றன. அதேபோல் கட்சிகளும் தேர்தல் நிதி பத்திரம் வாயிலாக பெற்ற பணத்தின் நிகர மதிப்பை மட்டும் வெளியிட்டால் போதும்.

யாருக்கு லாபம்
இதுமட்டுமின்றி தேர்தல் நிதி பத்திரங்கள் கட்சிகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்துவதில்லை. ஆதலால் பணமுதலைகள் நன்கொடை வழங்க பல பின்வாசல்களையும் திறக்கிறது. 2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி இந்திய அரசு, தேர்தல் நிதி பத்திரம் குறித்து அறிவித்தது. உண்மை நிலவரம் யாதெனில், தேர்தல் நிதி பத்திரம் அறிவித்த உடனே, ரூ.1,221 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனையானது.
இதில் பாஜக ரூ.10,200 கோடியை பெற்றது. காங்கிரசுக்கு ரூ.5 கோடியும், மீதமுள்ள கட்சிக்கு ரூ.6 கோடியும் மட்டுமே கிடைத்தன. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.6,128 கோடி மதிப்பிலான ரூ.12,313 கோடி தேர்தல் நிதி பத்திரங்கள் விற்கப்பட்டன. இந்த பத்திரங்களின் வாயிலாக எந்த கட்சி அதிக பணம் ஈட்டியது என்ற தகவல் இதுவரை இல்லை. ஆனாலும் இதிலும் பாஜகவே பெருமளவு லாபம் அடைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Electroral bonds:  An honest scheme with a dishonest intention
தேர்தல் நிதி பத்திரம் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம்

மாநில கட்சிகள்
டாடா குழுமத்துக்கு சொந்தமான முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.6,356 கோடியும், காங்கிரசுக்கு ரூ.55.62 கோடியும் நிதி அளித்தது. பாரதி என்டர்பிரைசஸ் தேர்தல் அறக்கட்டளை மூலம் பாஜகவுக்கு ரூ.67.25 கோடியும், காங்கிரசுக்கு ரூ.39 கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது.
அதிகம் நன்கொடை பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசும் (ரூ.26 கோடி), எதிர்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (ரூ.25 கோடி) கட்சியும் உள்ளன.

முரண்பாடு
தேர்தல் நிதி பத்திரம் வழங்கும் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி இடையேயும் கருத்து வேறுபாடு உள்ளது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் தேர்தல் நிதி பத்திரத்தால் ஏற்படும் மூன்று சிக்கல்களை எழுப்பினார். அவைகள், “தங்கள் அடையாளத்தை மறைக்க, நிறுவனங்கள் அல்லாத போலியான நிறுவனங்களும் தேர்தல் நிதி பத்திரம் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதியாக அளிக்கலாம். இந்த போலி நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமான இடத்தை வழங்குவதன் மூலம் பணமோசடிக்கு வழிவகுக்கும். தேர்தல் நிதி பத்திரங்களுக்கு பதிலாக டீமேட் வடிவில் பத்திரங்கள் வழங்கினால் வெளிப்படையான தேர்தல் நிதிக்கு வழிவகுக்கும்.” என்பனவாகும்.

தேர்தல் நிதிபத்திரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் அதிருப்தி

உர்ஜித் பட்டேல் அதிருப்தி
இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் பிரிவு 31, பத்திரங்களை வழங்க ரிசர்வ் வங்கியை உச்ச வங்கியாக அதிகாரம் அளிக்கிறது. ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் 31 வது பிரிவு திருத்தப்பட்டு, தேர்தல் நிதி பத்திரம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்பட்டால் அது மத்திய வங்கியின் (ரிசர்வ் வங்கி) அதிகாரத்தை நீர்த்துப் போக செய்யும்.
இதனால்தான் அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் (2017) “தற்காலிக பண சான்றிதழ் வடிவில் தேர்தல் நிதி பத்திரங்கள் வழங்க அரசு முடிவு செய்தால், ரிசர்வ் வங்கி அத்தகைய தேர்தல் நிதி பத்திரங்களை வழங்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியும் இதுதொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, தேர்தல் நிதி பத்திரம் விவகாரத்தில் உரிய விசாரணையை கூறுகிறார். இதுகுறித்து அவர், “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீது இந்திய அரசுக்கு நேரடி கட்டுப்பாடு உள்ளது. ஆதலால் தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக அரசு எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும்.
மேலும் ஆளும் கட்சியினரால் கண்காணிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தினால் பல நன்கொடையாளர்கள் பாஜக எதிர்ப்பு கட்சிகளுக்கு நிதி அளிக்காமல் விலகியுள்ளனர். தேர்தல் நிதி பத்திரங்கள் கறுப்பு பணத்தை வெண்மையாக்கும் சட்ட வழிமுறையாக மாறிவிட்டன” என்றார். காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரிக்கிறது. இதன் மூலம் ஒரு லாரி பணத்தை வங்கியில் கொண்டு செலுத்த முடியும் என்று அர்த்தமல்ல.

பாஜக தவிர்ப்பு
பத்திரங்களை வாங்கவும், கட்சிகளுக்கு நிதியாக அளிக்கவும் தேவைப்படும் அளவிற்கு மட்டுமே வரையறை வழங்கப்பட்டுள்ளது என்பது பாஜகவின் வாதம். பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது,“கணிணி முற்றிலும் வெளிப்படையானது. தேர்தல் நிதி பத்திரங்கள் அமலுக்கு வராவிட்டால், கணக்கில் வராத கள்ளப் பணம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கிடைத்திருக்கும். தற்போது அது தடுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக நேர்மையற்ற வணிகத்தை தடுக்கிறது” என்றார்.

தேர்தல் நிதி பத்திரம் சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் திட்டமிடப்படாத தேர்தல் நிதி பத்திரம் வழங்கியுள்ளனரே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க முடியாமல் தவிர்க்கிறார்.!

ராஜீவ் ராஜன்
சிறப்பு நிருபர்
ஈநாடு நாளேடு

Intro:Body:

Electroral bonds: A means to clean up the political funding or a tool discourage donation to the oppposite parties?

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.