ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 65 வயது முதியவர் கைது! - முதியவர் கைது

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 5 சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 65 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

elderly man arrested
elderly man arrested
author img

By

Published : Aug 3, 2020, 7:58 PM IST

கரோனா காலத்தில் குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலம் பாலோத் மாவட்டத்தில், ஐந்து சிறுமிகளை 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளைத் தொலைக்காட்சி பார்க்கலாம் என வீட்டுக்கு அழைத்து, இந்தக் கொடூரத்தை அவர் செய்துள்ளார். ஜூலை 28 முதல் 30ஆம் தேதி வரை, அர்ஜூனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிகளில் ஒருவர் சோகமாக இருந்துள்ளார்.

அப்போது, என்ன நடந்தது என தாய் கேட்க, அனைத்தையும் சிறுமி விவரித்துள்ளார். பின்னர், மற்ற சிறுமிகளும் நடந்த கொடூர சம்பவத்தை தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற் கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான சிறுமிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.