ETV Bharat / bharat

போர் பதற்றம்: இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை!

author img

By

Published : Oct 26, 2020, 5:39 AM IST

டெல்லி: இந்திய-சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை தணிக்கும் விதமாக ராணுவ ரீதியான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறவுள்ளது.

India, China
India, China

கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கிடையே, எல்லை சச்சரவை தீர்க்கும் விதமாக இரு நாட்டு ராணுவப் பிரதிநிதிகளுக்குமிடையே எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த முடிவுமின்றி நிறைவடைந்தது.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, ஏழாம்கட்டப் பேச்சுவார்த்தை சுசுல் கிராமத்தில் நடைபெற்றது. இருப்பினும், இதில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அந்தச் சந்திப்பை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ”இந்திய-சீன எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரச்னையைத் தீர்க்க ராணுவ, தூதரக ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. ராணுவங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள, விரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய-சீன எல்லைப் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், அங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு இது மேலும் சவாலை அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.