உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மகேஸ்வரி விருந்தினர் மாளிகை அருகே இன்று (டிச. 02) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் திருமண நிகழ்வுக்குச் சென்று காரில் வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த எட்டு பேர் உயிரிழந்து ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து காவல் துறையினர் கூறுகையில், மணல் பாரம் ஏற்றிவந்த லாரியின் சக்கரம் வெடித்ததால் கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எனத் தெரிவித்தனர்.