ETV Bharat / bharat

கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராமோஜி குழுமம்! - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராமோஜி குழுமம் சார்பில், குடும்பஸ்ரீ, "I Am For Alleppey' ஆகியத் திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.

கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராமோஜி குழுமம்!

author img

By

Published : Feb 9, 2020, 2:15 PM IST

கடந்த செப்டம்பர் மாதத்தின் பருவ மழையின்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் கேரளாவின் பல்வேறுப் பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக, ஆலப்புழா பகுதி கடும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் பலரது இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனரமைப்புப் பணியில் ராமோஜி குழுமம் ஈடுபட்டது. கேரள அரசின் வீடு புனரமைப்புத் திட்டத்திற்கு அடுத்தபடியாக, இந்தத் திட்டம்தான் இரண்டாவது பெரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

'குடும்பஸ்ரீ' என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு, வீடு கட்டும் பணியை ராமோஜி குழுமம் மேற்கொண்டது. 'ஈநாடு' புனரமைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, இந்த நலத்திட்டத்தை ஆலப்புழா மாவட்டத்தின் சார் ஆட்சியர் கிருஷ்ணா தேஜா தொடர்ச்சியாக மேற்பார்வையிட்டார். 7.7 கோடி ரூபாய் மதிப்பில் 40 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட 121 வீடுகள் அடித்தளத்திலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராமோஜி குழுமம்!

இந்நிலையில் இன்று 3 மணிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும், இந்த விழாவில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ராமோஜி குழுமத்தின் ஈநாடு நிர்வாக இயக்குநர் சி.ஹெச். கிரண், மார்கதரிசி சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதையும் படிங்க...அச்சத்தை மீறி தைப்பூசத் திருவிழாவை கொண்டாடிய மலேசிய தமிழர்கள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.