மேற்கு வங்கத்தில் ஆளும் அரசிற்கும், ஆளுநருக்கு இடையே அவ்வப்போது வார்த்தை போர் நடைபெறுவது வாடிக்கை.
இந்நிலையில் தற்போது, மேற்கு வங்கத்தில் கல்வி அரசியலாக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள ஆளுநர் ஜகதீப் தங்கர் “கல்விதான் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொறு தலைமுறைக்கு கடத்தப்படும் ஆன்மா. ஆனால் மேற்கு வங்கத்தில் கல்வி அரசியலாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கல்வியை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்படைகிறது.
ஆளுநர்தான் மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தர். ஆனால், பல்கலைக்கழக துணை வேந்தர்களை தன்னுடன் காணொலி வாயிலாக கலந்து ஆலோசிக்க அனுமதிப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்துள்ள பகரம்பூர் காங்கிரஸ் எம்பி அதிர் சவுத்ரி, “மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் அரசியலமைப்பு சட்டத்திட்டத்துக்கு இணங்காததால் அவரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடியரசு தலைவரிடம் முறையிட வேண்டும், ஆனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் போராடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க...கிராமப்புற மாணவர்களுக்கு கானல்நீராகும் ஆன்லைன் கல்வி!