பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி வந்தார்.
இதனையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தனர்.
அதன்பின் எடப்பாடி பழனிசாமி மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, தமிழ்நாட்டில் நிலவும் நதிநீர் பிரச்னைக் குறித்தும், காவிரி பிரச்னை குறித்தும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.