டெல்லி வன்முறையின்போது உளவுப்பிரிவு அலுவலரான அங்கித் சர்மா என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூசேன் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து காவலர்களின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் முன்பிணைக்கு விண்ணப்பித்தார்.
எனினும் அவருக்கு முன்பிணை கிடைக்கவில்லை. இதனால் சில காலம் தலைமறைவாக இருந்த அவர், நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாகத் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில சட்டவிரோத இயக்கங்களுக்குப் பண உதவி அளித்தார் என அந்தக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் தாஹிரின் சகோதரர் ஷா ஆலம் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கும் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடமும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடந்த வன்முறையில் 54 பேர் உயிரிழந்தனர்.
தாஹிர் மீது ஏற்கனவே கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் காங்., மார்க்சிஸ்ட் கூட்டு வேட்பாளர் நிறுத்தம்