ETV Bharat / bharat

'வேலைவாய்ப்பிற்கு அரசு அற்ப முயற்சியையே மேற்கொண்டுள்ளது' - பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர் கருத்து - பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கருத்து

”வேலைவாய்ப்பு உருவாக்குதலில் இந்த அரசானது சில அற்ப முயற்சிகளையே மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்திடம் பணப்புழக்கம் இல்லாமல் போனாலும் கருத்துக்களும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் நிறைந்தே இருக்கின்றன” என இந்தாண்டு நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர் ரேணு கோலி தெரிவித்துள்ளார்.

economist-renu-kohli-opinion-on-budget-2020
வேலை வாய்ப்பிற்கு அரசின் அற்ப முயற்சி - பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர் !
author img

By

Published : Feb 6, 2020, 12:07 PM IST

நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றபின் முழுமையான இரண்டாவது நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வணிகர்களும் குடும்பத்தலைவர்களும் பொருளாதார மந்த நிலையை இந்த நிதிநிலை அறிக்கை நீக்கும் என எதிர்பார்த்தனர்.

இச்சூழலில் நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை உரை எவ்வாறு பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதளவும் ஊக்கமளிக்காது என்பதை பொருளாதார நிபுணர் ரேணு கோலி விவரிக்கிறார். பொருளாதார மந்த நிலைக்கு எதிரானதாக இருக்கும் என நினைத்த பெரும்பாலோரின் எதிர்பார்ப்புகளை, இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்திலேயே மடித்துவைத்துள்ளது. முடிவாக, பெரும்பாலானோர் இந்த நிதிநிலை அறிக்கை இடையறா பொருளாதார மந்த நிலையை மாற்றும் எனப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் பாதியளவு கூட நிறைவேற்றப்படவில்லை என்பதே ஏமாற்றம் கலந்த உண்மையாகும்.

அரசே பெருமளவில் பொரளாதார வளங்களை திரட்டும் பணியில் கடும் சவால்களைச் சந்தித்துவருகிறது என்பது அனைவரும் அறிந்ததேயாயினும், வணிகர்களும் குடும்பத் தலைவர்களும் இந்த நிதிநிலை அறிக்கை தங்கள் செலவுத்திறனை ஊக்கப்படுத்த ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தனர்.

ஆனால், (i) அரசு மானியங்களைச் செலுத்துவதை மிக சாதுர்யமாக தனித்துவமான முறையில் தள்ளிப்போடுதல், (ii)அடுத்தாண்டு அரசு முதலீடுகளை திரும்பப்பெறுவதன் மூலம் பெருமளவில் பொருளாதார வளங்களை கூட்ட முயற்சி செய்தல், (iii) நிதிப் பொறுப்பும் நிதிநிலை அறிக்கை நிர்வாகமும் வழங்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% வரையில் நிதிப் பற்றாக்குறை இருக்கலாம் என்ற அடிப்படையில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் முயற்சியின் மூலம் முயன்ற போதிலும், இந்த நிதிநிலை அறிக்கையால் எந்தவித நிதி ஊக்கமும் அளிக்கமுடியவில்லை. எப்படியோ நிதிச் சுருக்கத்தை தவிர்த்து சமாளித்துவிட்டது. இதுதான் அரசின் தற்போதைய இருப்புநிலை.

வருமானவரிக் குறைப்பு – இது உதவுமா ?

சில மாதங்களுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போன்ற வரிக்குறைப்பினை வருமானவரி செலுத்துவோர் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வரிவிகிதம் குறைக்கப்பட்ட போதிலும் அவை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஏற்றுக்கொள்ளப்படும்.

அதாவது 5 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை 10% வரியும், 7.5 முதல் 10 லட்சம் வரை 15% வரியும், 10 முதல் 12.5 லட்சம் வரை 20% வரியும், 12.5 முதல் 15 லட்சம் வரை 25% வரியும் செலுத்த வேண்டும். ஆனால் முந்தைய வரிவிதிப்பு முறையில் இருந்த வரி விலக்கு அல்லது வரிக்கழிவுகளை கோர முடியாது. உதாரணமாக வீட்டு வாடகை, காப்பீட்டு பிரீமியம், குழந்தைகளின் கல்விக்கட்டணம், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, வீட்டுக்கடனுக்கான வட்டி விலக்கு இல்லாத இந்தப் புதிய வருமான வரி திட்டத்தையோ அல்லது பழைய திட்டத்தையோ ஏற்று ஒருவர் தொடரலாம். இரு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தத் தேவையின் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் தற்போதைக்கு வரிச்செலுத்தவோரை பாதிக்காது. ஆனாலும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனேயே தங்கள் செலவு செய்யத்தக்க வருமானத்தைச் செலவு செய்வது பற்றிய முடிவுகளை எடுப்பர்.

இந்த நிதி நிலை அறிக்கையின் விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பிறகே உணரப்படும். நிதியமைச்சர் சில உதாரணங்களுடன் விளக்கியிருந்தபோதிலும் பெருமளவு வரி சேமிப்புகள் சாத்தியமில்லை. ஒரு தெளிவான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளைப் புறம் தள்ளியே வைத்திருக்கும்.

சப்கா விஷ்வாஷ்

நிதியமைச்சர் செல்வத்தை உருவாக்குபவர்களான வியாபாரிகள் மீதும் தொழில் முனைவோர் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். தன்னுடைய உரையில் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் செல்ல முழக்கமான எல்லோருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை போன்றவற்றை நமக்கு நினைவுப்படுத்தினார். கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக “நம்பிக்கை பற்றாக்குறை“ என்ற வார்த்தை முனுமுனுக்கப்பட்டு வந்ததின் எதிரொலியே இது எனலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. கூட்டமைப்பு மாற்றம் பற்றிய தனியார் தொழில் நிறுவனங்களின் கருத்துகள், நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகள், பொருளாதார கொள்கைகளின் போக்கு அவற்றை பற்றிய தெளிவின்மையால் ஏற்பட்ட சங்கடங்கள் போன்றவை தொழில்துறையின் மேல் உள்ள நம்பிக்கையின் சறுக்கலுடன், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கும் காரணமாகும்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளாவன: வரி செலுத்தவோர் சாசனம் சட்டப்பூர்வமான சட்டமாக நிறுவுதல், வருமான அளவீடுகளை பேசித் தீர்த்தல், ஒப்பந்தச் சட்டத்தை பலப்படுத்துதல் முதலியன.

வேலைவாய்ப்பு உருவாக்கம்

வேலைவாய்ப்பு உருவாக்குதலில் இந்த அரசானது சில அற்ப முயற்சிகளையே மேற்கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்பயிற்சி அளிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல். இது எந்த வகையில் நமக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை அரசுதான் தெளிவுபடுத்த முடியும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 102 லட்சம் கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுசாரா திறனாளிகள் தங்கள் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும்.

ஆசிரியர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தாதியர் முதலியோருக்கு தகுந்த பயிற்சியும் உதவியும் அளிப்பதன் மூலம் அவர்களின் தரம் உலக அளவிற்கு உயர்த்தப்பட்டு வெளிநாடுகளில் வேலைவாய்பினை உருவாக்க முடியும். இந்த நடவடிக்கையானது வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். இதோடு அல்லாமல், நாட்டு வளர்ச்சிக்குப் புத்துணர்ச்சி அளிக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகளும் உருவாக்கப்பட்ட வேகத்தின் பலனாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெருஞ்சுமையில் சிக்கியுள்ளது. ஆனால் எதிர்பார்த்த விளைவுகளோ, விரும்பிய விளைவுகளோ ஏற்படவில்லை. இது எந்த வகையிலும் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாயில்லை.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைஉறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது 13.4% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கான திட்ட நிதி சென்ற ஆண்டு அளவிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் 2020ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுதும் செலவு செய்யப்படவில்லை. பட்டியலினத்தவர், பிற நலிவடைந்த பிரிவினர் முன்னேற்றத்திற்கான செலவின ஒதுக்கீடு முறையே 12%, 20% உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயம், பண்ணையம், வாழ்வாதாரம், கிராமப்புற மேம்பாடு இன்னும் பிற துறைகள் பற்றி நிறைய பேசப்பட்டிருந்த போதிலும் மாநிலங்களை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தெளிவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த நிதிநிலை அறிக்கையானது ஒருவித களைப்பையும் சோர்வையும் மட்டுமே உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாம் புரிந்து கொண்டது யாதெனில் அரசாங்கத்திடம் பணப்புழக்கம் இல்லாமல் போனாலும் கருத்துகளும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் நிறைந்தே இருக்கின்றன.

டெல்லியை உறைவிடமாகக் கொண்ட பொருளாதார நிபுணர் ரேணு கோலி அவர்களின் கருத்து அவரை மட்டுமே சாரும்.

இதையும் படியுங்க: பட்ஜெட் 2020 எதிரொலி: மாநில அரசுகளுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

Intro:Body:

நிதிநிலை அறிக்கை: 2020: என்ன ஒரு ஏமாற்றம்! நிதிநிலை அறிக்கை 2020: இந்தியா பிசினஸ் நியுஸ் எதிர் பார்ப்புகளும், ஏமாற்றங்களும்.

    மோதி அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின் முழுமையான இரண்டாவது நிதிநிலை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  வணிகர்களும், குடும்பத்தலைவர்களும் பொருளாதார மந்த நிலையை இந்த நிதிநிலை அறிக்கை நீக்கும் என எதிர்பார்த்தனர்.  நிதி அமைச்சரின் நிதிநிலை அறிக்கை உரை எவ்வாறு பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதளவும் ஊக்கமளிக்காது என்பதை பொருளாதார நிபுணர் ரேணு கோலி விவரிக்கிறார்.

    பொருளாதார மந்த நிலைக்கு எதிரானதாக இருக்கும் என நினைத்த பெரும்பாலோரின் எதிர்பார்ப்புகளை,  இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்திலேயே மடித்து வைத்து உள்ளது.  முடிவாக, பெரும்பாலானோர் இந்த நிதிநிலை அறிக்கை இடையறா பொருளாதார மந்த நிலையை மாற்றும் என பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.  ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் பாதி அளவு கூட நிறைவேற்றப்படவில்லை என்பதே ஏமாற்றம் கலந்த உண்மையாகும்.

    அரசே பெருமளவில் பொரளாதார வளங்களை திரட்டும் பணியில் கடும் சவால்களை சந்தித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததேயாயினும், வணிகர்களும், குடும்பத்தலைவர்களும் இந்த நிதிநிலை அறிக்கை தங்கள் செலவுத்திறனை ஊக்கப்படுத்த ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தனர்.

    ஆனால், (i)அரசு மானியங்களை செலுத்துவதை மிக சாதுர்யமாக தனித்துவமான முறையில் தள்ளிப்போடுதல் (ii) அடுத்தாண்டு அரசு முதலீடுகளை திரும்பப்பெறுவதன் மூலம் பெருமளவில் பொருளாதார வளங்களை கூட்ட முயற்சித்தல் (iii) நிதி பொறுப்பும் பட்ஜட் நிர்வாகமும் வழங்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% வரையில் நிதி பற்றாக்குறை இருக்கலாம் என்ற அடிப்படையில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் முயற்சியின் மூலம் முயன்ற போதிலும், இந்த நிதிநிலை அறிக்கையால் எந்த வித நிதி ஊக்கமும் அளிக்கமுடியவில்லை.  எப்படியோ நிதிச் சுருக்கத்தை தவிர்த்து சமாளித்து விட்டது.  இது தான் அரசின் தற்போதைய இருப்புநிலை.

    வருமான வரிக்குறைப்பு – இது உதவுமா ?

    சில மாதங்களுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போன்ற வரிக்குறைப்பினை வருமான வரி செலுத்துவோர் எதிர்பார்த்தனர்.  அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வரிவிகிதம் குறைக்கப்பட்ட போதிலும் அவை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஏற்றுக்கொள்ளப்படும்.  அதாவது 5 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை 10 %  வரியும்,  7.5 முதல் 10 லட்சம் வரை 15 % வரியும், 10 முதல் 12.5 லட்சம் வரை 20 %  வரியும், 12.5 முதல் 15 லட்சம் வரை 25 % வரியும் செலுத்த வேண்டும்.  ஆனால் முந்தைய வரிவிதிப்பு முறையில் இருந்த வரி விலக்கு அல்லது வரிக்கழிவுகளை கோர முடியாது.  உதாரணமாக வீட்டுவாடகை,  காப்பீட்டு பிரீமியம், குழந்தைகளின் கல்விக்கட்டணம், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, வீட்டுக்கடனுக்கான வட்டி விலக்கு இல்லாத இந்த புதிய வருமான வரி திட்டத்தையோ அல்லது பழைய திட்டத்தையோ ஏற்று ஒருவர் தொடரலாம்.  இரு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மொத்த தேவையின் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் தற்போதைக்கு வரிச்செலுத்தவோரை பாதிக்காது ஆனாலும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனேயே தங்கள் செலவு செய்யத்தக்க வருமானத்தை செலவு செய்வது பற்றிய முடிவுகளை எடுப்பர்.  இந்த நிதி நிலை அறிக்கையின் விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பிறகே உணரப்படும்.  நிதி அமைச்சர் சில உதாரணங்களுடன் விளக்கியிருந்தபோதிலும் பெருமளவு வரி சேமிப்புகள் சாத்தியமில்லை.  ஒரு தெளிவான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை புறம் தள்ளியே வைத்திருக்கும்.

    சப்கா விஷ்வாஷ்

    நிதியமைச்சர் செல்வத்தை உருவாக்குபவர்களான வியாபாரிகள் மீதும் தொழில் முனைவோர் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்.  தன்னுடைய உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மோடி அரசின் செல்ல முழக்கமான எல்லோருடனும் சேர்ந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை போன்றவற்றை நமக்கு நினைவு படுத்தினார்.  கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக “நம்பிக்கை பற்றாக்குறை“ என்ற வார்த்தை முணு முணுக்கப்பட்டு வந்ததின் எதிரொலியே இது எனலாம் இந்த முணு முணுப்பிற்கு பல காரணங்கள் உண்டு கூட்டமைப்பு மாற்றம் பற்றிய தனியார் தொழில் நிறுவனங்களின் கருத்துக்கள்,  நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகள், பொருளாதார கொள்கைகளின் போக்கு அவற்றை பற்றிய தெளிவின்மையால் ஏற்பட்ட சங்கடங்கள் போன்றவை இதுவே தொழில்துறையின் மேல் உள்ள நம்பிக்கையின் சறுக்கல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கும் காரணமாகும்.  இது தொடர்பாக எடுக்க வேண்டிய ஆக்கபுார்வ நடவடிக்கைகளாவன:  வரி செலுத்தவோர் சாசனம் சட்டபுார்வமான சட்டமாக நிறுவுதல்,

வருமான அளவீடுகளை பேசித்தீர்த்தல், ஒப்பந்த சட்டத்தை பலப்படுத்துதல் முதலியன.

வேலைவாய்ப்பு உருவாக்கம்

    வேலைவாய்ப்பு உருவாக்குதலில் இந்த அரசானது சில அற்ப முயற்சிகளையே மேற்கொண்டுள்ளது உதாரணத்திற்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்பயிற்சி அளிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.   இது எந்த வகையில் நமக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை அரசுதான் தெளிவுபடுத்த முடியும்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 102 லட்சம் கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுசாரா திறனானிகள் தங்கள் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும்.  ஆசிரியர்கள்,

செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் தாதியர் முதலியோருக்கு தகுந்த பயிற்சியும் உதவியும் அளிப்பதன் மூலம் அவர்களின் தரம் உலக அளவிற்கு உயர்த்தப்பட்டு வெளிநாடுகளில் வேலைவாய்பினை உருவாக்க முடியும்.  இந்த நடவடிக்கையானது வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும்.  இதோடல்லாமல், நாட்டு வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் உருவாக்கப்பட்ட வேகத்தின் பலனாக தேசியநெடுச்சாலை ஆணையம் பெருஞ்சுமையில் சிக்கியுள்ளது.  ஆனால் எதிர்பார்த்த விளைவுகளோ,

விரும்பிய விளைவுகளோ ஏற்படவில்லை.  இது எந்த வகையிலும் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாயில்லை.

    மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது 13.4%  குறைக்கப்பட்டுள்ளது.  ஆனால் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கான திட்ட நிதி சென்ற ஆண்டு அளவிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது அதிலும் 2020 நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுதும் செலவு செய்யப்படவில்லை.  பட்டியலினத்தவர் மற்றும் பிற நலிவடைந்த பிரிவினர் முன்னேற்றத்திற்கான செலவின ஒதுக்கீடு 12% மற்றும் 20% உயர்த்தப்பட்டுள்ளது.  விவசாயம், பண்ணையம், வாழ்வாதாரம், கிராமப்புற மேம்பாடு இன்னும் பிற துறைகள் பற்றி நிறைய பேசப்பட்டிருந்த போதிலும் மாநிலங்களை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தெளிவில்லை.  ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த நிதிநிலை அறிக்கையானது ஒருவித களைப்பையும், சோர்வையும் மட்டுமே உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் நாம் புரிந்து கொண்டது யாதெனில் அரசாங்கத்திடம் பணப்புழக்கம் இல்லாமல் போனாலும் கருத்துக்களும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நிறைந்தே இருக்கின்றன.  டெல்லியை உறைவிடமாகக் கொண்ட பொருளாதார நிபுணர் ரேணு கோலி அவர்களின் கருத்து அவரை மட்டுமே சாரும்.

    பொருளாதார வீழ்ச்சியானது பெரும் குழுப்பத்தை ஏற்படுத்தியதில் 5 இல் 4 பெரும் வரிகள் நிதி நிலை அறிக்கையில் கூறிய இலக்கை எட்ட முடியவில்லை.  அதிலும் முக்கியமாக கார்ப்பரேட் வசூல் அடைந்த வீழ்ச்சியே அதிகம்.  

நிதிநிலை அறிக்கை 2020-2021: பொருளாதார மந்த நிலையால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு கார்ப்பரேட் வரிகளை பெருமளவில் குறைத்ததால் இந்தாண்டு மத்திய அரசின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  துவளும் இந்திய பொருளாதாரத்தை துாக்கி நிறுத்துவதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற ஆண்டு செப்படம்பரில் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளை 31-32% இருந்து வெறும் 25.12% குறைத்தார்.  அது போலவே புதிதாக நிறுவப்பட்ட உற்பத்தித் தொழில்களுக்கு முந்தைய வரியானது வெறும் 15% குறைக்கப்பட்டது.

    கார்ப்பரேட் வரி, ஜிஎஸ்டி, வருமான வரி ஆகிய மூன்றின் மூலமே மத்திய அரசு தனது பெரும்பங்கு நிதியை திரட்டுகிறது.  அவைகளுக்கு அடுத்து எக்ஸைஸ் வரிகளும், சுங்க வரிகளும் வெரும் நிதிச்சுமையை தாங்குகின்றன.  தற்போதய திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வார்ப்பரேட் வரி, வருமான வரி, ஜிஎஸ்டி, எக்சைஸ் வரி, சுங்க வரி உட்பட எந்த வரியும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்ட இலக்கை எட்ட முடியாது.

    இந்தியாவின் பெரும்பான்மையான வரிகளான ஐந்தில் நான்கு வரிகளின் - ஜிஎஸ்டி, எக்சைஸ் வரி, சுங்க வரி – வருமானம் சென்ற ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்.  ஆனால் பார்ப்பரேட் வரியானது நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டிற்கு கீழே செல்வதோடல்லாமல் சென்ற ஆண்டின் வசூலை விட கீழே செல்லக்கூடும்.

    எதிர்பார்த்தது போலவே, தனியார் முதலீட்டை ஊக்குவிக்க கார்ப்பரேட் வரியை குளைத்ததன் மூலம் மத்திய வரி வசூல் இலக்கில் பெரிய பள்ளமே விழக்கூடும்.  இதன் விளைவாக மத்திய அரசின் நிகர வருவாய் 15.05 லட்சம் கோடியாக இருக்கும் ஆனால் நிதிநிலை அறிக்கைப்படியான வருவாய் 16.50 லட்சம் கோடியாக இருக்க வேண்டும்.  அதாவது திருத்திய மதிப்பீட்டின் படி மத்திய அரசின் வருவாயில் 1.45 லட்சம் கோடி துண்டு வரும்.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற்றுப்படி, கார்ப்பரேட் வரியை குறைத்ததின் மூலம் மத்திய அரசிற்கு 1.45 லட்சம் கோடி இழப்பானது 2020 மார்ச் மாதத்துடன் முடியும் திருத்திய மதிப்பீட்டின் படி, நிதி அமைச்சரின் கூற்று உண்மை என அறியப்பட்டது.  நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திருத்திய மதிப்பீடு படி வரி வருவாயில் பெரிய துண்டு விழுந்து 1.55 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும்.  இதற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் வரி வசூலில் ஏற்பட்ட பெரிய தாக்கமே.

    தனது முதல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது நிர்மலா சீதாராமன் மிகவும் கம்பீரமாக கார்ப்பரேட் வரியைப் பற்றி கூறினார் சென்ற நிதியாண்டில் 7.66 லட்சம் கோடி கார்ப்பரேட் வரி வசூலித்து சாதனை படைக்கப் போவதாக சவால் விட்டார்.  ஏனெனில் மத்திய அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது கார்ப்பரேட் வரி, பிற வரிகளான ஜிஎஸ்டி 6.63 லட்சம் கோடிகளும், வருமான வரி 5.69 லட்சம் கோடிகளும் பெற்றுத் தருகின்றன.

    எப்படி இருந்தபோதிலும் கார்ப்பரேட் வரி வசூல் சென்ற ஆண்டு வசூலை விட குறைவாக இருக்கும் ஏனெனில் இந்தாண்டு மத்திய அரசு கார்ப்பரேட் வரி மூலம் வசூல் செய்தது 6.63 லட்சம் கோடிகளுக்கு சற்று கூடுதலாக 2019 ஜீலையில் கார்ப்பரேட் வரி மூலம் 7.66 லட்சம் கோடி வசூல் செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர் றெ்போது வெறும் 6.10 லடசம் போடி மட்டுமே 2019-2020 நிதியாண்டிற்கு வசூல் செய்ய முடியும் என நம்புகிறார்.  இது அவரது முந்தைய நிதி நிலை அறிக்கையில் எதிர்பார்த்ததை விட 20%  குறைவாகும்.

    அதுபோலவே இந்தாண்டின் வருமான வரி வசூலும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட இலக்கில் 10000 கோடியை வசூல் செய்யமுடியாது நிர்மலா சீதாராமன் வருமான வரி வசூல் இலக்காக 5.69 லட்சம் கோடியை நிர்ணயித்திருந்தார்.  ஆனால் அவரது திருத்திய மதிப்பீட்டின் படி இந்த நிதியாண்டின் வருமான வரி வசூல் 5.59 லட்சம் கோடி மட்டுமே. ஆனாலும், சென்ற ஆண்டு வருமான வரி வசூலான 4.73 லட்சம் கோடியை விட இந்தாண்டு அதிகமாகவே வசூலாகியுள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம்.  ஜிஎஸ்டி வரி வசூலிலும் இதே நிலையே காண்பபடுகிறது திருத்திய மதிப்பீடு படி நிதி நிலை அறிக்கையின் மதிப்பீடான 6.63 லட்சம் கோடிக்கு பதில், சிஜிஎஸ்டி, மற்றும் ஐஜிஎஸ்டி வரி வசூலானது 51000 கோடி குறைவாக 6.12 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கும்.  ஆனாலும் வருமான வசூலில் ஏற்பட்டது போலவே ஜிஎஸ்டி வரி வசூலிலும் சென்ற ஆண்டு வரி வசூலான 5.81 லட்சம் கோடியை விட கூடுதலாகவே வசூலாகும்.  

(மூத்த ஆசிரியர் கிருஷ்ணானந் திரிபாதி)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.