ETV Bharat / bharat

நாடு முழுவதும் ரூ.613 கோடி பறிமுதல் - 613 கோடி

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு நாடு முழுவதும் ரூ.613 கோடி பிடிபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 613 கோடி பறிமுதல்
author img

By

Published : Mar 28, 2019, 2:26 PM IST

தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கானத் தேதிகளை மார்ச் 10ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் தேதிகளை அறிவித்த நாள் முதலே தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

மார்ச் 10 முதல் மார்ச் 27 வரை 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் முழுவதும் தேர்தல் ஆணையம் சோதனை நடத்தியதில் ரூ.613 கோடி பிடிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ரூ.104 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.145 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள், ரூ.170 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள், ரூ.11 கோடி மதிப்புள்ள மற்ற பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகப்பட்சமாக ஆந்திராவில் ரூ.62 கோடி, தமிழ்நாட்டில் ரூ.49 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.24 கோடி, கர்நாடகாவில் ரூ.20 கோடி, ஆந்திராவில் ரூ.17 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் சிக்கியதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.92 கோடி, மணிப்பூர் மாநிலத்தில் ரூ.23 கோடி, உத்தரப்பிரதேசத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் சிக்கியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.