ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் சட்டமேலவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு - மகாராஷ்டிராவில் சட்டமேலவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

மும்பை: சட்டமேலவை உறுப்பினர்கள் ஒன்பது பேரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் மே 21ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

uddhav thackeray
uddhav thackeray
author img

By

Published : May 1, 2020, 2:24 PM IST

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் அமைச்சர் அல்லது முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் மேலவை அல்லது கீழவை என ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும்.

ஆனால் தற்போது கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் மகாராஷ்டிரா மேலவையில் இரண்டு உறுப்பினர் பதவிகளை அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நியமிக்கலாம். இப்போது காலியாக இருக்கும் இந்த மேலவை உறுப்பினர் பதவிக்கு உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரவை இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்துவந்தார். இதனிடையே, இந்த விவகாரத்தில் தனக்கு உதவும்படி மோடிக்கு தாக்கரே கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆலோசித்து முடிவெடுப்பதாக மோடி தாக்கரேவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சட்டமேலவைத் தேர்தலை நடத்தக் கோரி கோஷ்யாரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், சட்டமேலவை உறுப்பினர்கள் ஒன்பது பேரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் மே 21ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம், அம்மாநில சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: சிவப்பு மண்டல குறியீட்டில் கேரளாவின் 2 மாவட்டங்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.