இதுகுறித்து தெரிவித்துள்ள தேசிய நில அதிர்வு மையம், அஸ்ஸாம் சோனித்பூரில் இன்று (ஆக. 8) அதிகாலை 5.26 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோன்று, இன்று அதிகாலை ஒடிசாவின் கஞ்சம், கஜபதி மாவட்டங்களில் பல பகுதிகளில் 3.8 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூன் 18 முதல் ஜூன் 24 வரை தொடர்ச்சியாக அஸ்ஸாமில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று (ஆக. 7) மிசோரோமில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகளிலிருந்து இப்போதுதான் அஸ்ஸாம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கையில், மீண்டும் இயற்கை பேரிடர்கள் அஸ்ஸாமை பதம் பார்த்துவருகின்றன. இதனால் அம்மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க...கேரளா ஏர் இந்தியா விமான விபத்து - மீட்புப் பணிகள் நிறைவு