டெல்லி மற்றும் நொய்டா உள்ளிட்ட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானிலை திடீரென மாறியது. பின்னர் ஏற்பட்ட புழுதிப் புயலைத் தொடர்ந்து, நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் டெல்லியின் வானிலை 4.9 டிகிரி செல்சியசாக குறைந்தது.
இந்த மழை தொடர்வதால் வானிலை 35 டிகிரி செல்சியசாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 70 கி.மீ., வேகத்தில் வீசிய புழுதிப் புயலை பொதுமக்கள் பலரும் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி வானிலை இயக்குநர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், டெல்லி, என்சிஆர் பகுதிகளில் இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு மழைத் தொடரும் என்றார்.
இதையும் படிங்க: 'பிரபலமடைவதற்காக மலிவான அரசியலில் ஈடுபடும் ஆம் ஆத்மி'