சீகல் பயோ உருவாக்கிய ஆக்டிவ் வைரோசோம் டெக்னாலஜி(AVT) தடுப்பூசிகள் தயாரிப்பதற்கும் நோயெதிர்ப்பு சிகிச்சை பெறுபவர்களுக்கும் உதவியது. ஒரு குறிப்பிட்ட நோய் கிருமியிலிருந்து வெளிப்படும் நாவல் வைரஸ் (முன்னர் அறியப்பட்ட வகையின் புதிய நோய்க்கிருமி) மிக வீரியமாக காணப்படும்.
இதனை கட்ப்படுத்த வைரோசோம் (ஒருமருந்து அல்லது தடுப்பூசி விநியோகம்) உருவாக்க பெரிதும் உதவுகிறது. இதன்மூலம் கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான புதிய தடுப்பூசியை கண்டறியலாம். மேலும் கோவிட்-19 நோயறிய உதவும் ELISA கருவிகளையும் உருவாக்க இவை பயன்படுத்தப்படும்.
துல்லியமாக நோயறிதல், நோய் பரிமாற்ற சங்கிலியை உடைத்தல், சிகிச்சை மற்றும் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள்தான் கோவிட்-19ன் சவால்களை எதிர்கொள்வதற்கான அடிப்படை விஷயமாகும்.
இவற்றில், தடுப்பூசிகளை உருவாக்குவது மிக நீண்ட செயல்முறையை கொண்டுள்ளது. எனவே இப்போது அந்த செயல்பாட்டை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் 'என்று இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறினார்.
இந்தியாவில் தற்போது பயன்படுத்தக்கூடிய பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்) முறையில் நோயறியும் கருவிகள் விரைவானவை மற்றும் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய உதவுகின்றன.
ஆனால் அறிகுறியற்ற தொற்றுநோய்களையோ அல்லது முன்பு கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களையோ, நோயால் பாதிக்கப்படாதவர்களையோ அல்லது கோவிட்-19லிருந்து மீண்டு வந்து வைரஸ் பரப்பிக்கொண்டிருப்பவர்களையோ அடையாளம் காண முடியாது.
இதற்கு நேர்மாறாக, நோய் எதிர்ப்புத் திறன்கண்டறியும் கருவி கோவிட்19-ன் ஆன்டிபாடிகளைக் கண்டறிய உதவுகின்றன. இதனால், இந்த நோய்த்தொற்றுகளையும் அடையாளம் காண முடியும். எனவே, எஸ்.வி.பி.எல் கோவிட்-19 க்கான நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் கருவிகளை தயாரிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
இதனால் அவற்றின் நோயெதிர்ப்பு திறனை சோதிக்க முடியும். கோவிட்-19ன் நடுநிலை ஆன்டிபாடிகள் மற்றும் செல்லுலார் நோயெதிர்ப்பு திறன் ஆகியவற்றைத் தூண்டுவதற்கான AV-S & AV-SP களின் திறனை அறிய இந்த சோதனை முதலில் காட்டு எலிகளில் செய்யப்படும்.
அதன் பின்னர் மற்ற சிறிய விலங்கினங்கள் அல்லது குரங்குகளில் நச்சுத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மருந்தியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் முதல் கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தடுப்பூசி தயாரிக்கப்படும்.
ஏ.வி.யின் தனித்துவமான அம்சங்கள் 18 முதல் 20 மாத இறுதிக்குள் முதல் கட்ட சோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி திட்டத்திற்கு இணையாக SBPL மேலும் கோவிட்- 19 எஸ் புரதம் வெளிப்படுத்தும் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் கருவியை உருவாக்குவதற்கான செயலில் வைரோசோம்கள் பயன்படுத்தப்படும்.
-
#DST funded #startup develops kits for #testing asymptomatic #COVID19 #infections & gears up for #vaccine #production .@drharshvardhan @Ashutos61 @IndiaDST @COVIDNewsByMIB @SINEIITB @anitadst16 @MoHFW_INDIA @ICMRDELHI https://t.co/PlbpLzi2Rw pic.twitter.com/YiIfPsvZD1
— DSTIndia (@IndiaDST) April 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#DST funded #startup develops kits for #testing asymptomatic #COVID19 #infections & gears up for #vaccine #production .@drharshvardhan @Ashutos61 @IndiaDST @COVIDNewsByMIB @SINEIITB @anitadst16 @MoHFW_INDIA @ICMRDELHI https://t.co/PlbpLzi2Rw pic.twitter.com/YiIfPsvZD1
— DSTIndia (@IndiaDST) April 11, 2020#DST funded #startup develops kits for #testing asymptomatic #COVID19 #infections & gears up for #vaccine #production .@drharshvardhan @Ashutos61 @IndiaDST @COVIDNewsByMIB @SINEIITB @anitadst16 @MoHFW_INDIA @ICMRDELHI https://t.co/PlbpLzi2Rw pic.twitter.com/YiIfPsvZD1
— DSTIndia (@IndiaDST) April 11, 2020
இது நாட்டின் குடிமக்கள் தங்களை எளிதில் சோதித்துப் பார்க்கவும், அவர்கள் நோயற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்யவும் உதவும்.
வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் இம்யூனோடியாக்னாஸ்டிக் கருவிகள் சோதனைகளுக்கு தயாராக இருக்கும். அதற்கு 10 முதல் 11 மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்படும்.
மறுபுறம், ஏ.வி தடுப்பூசி உருவாக்க அதிக நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவசரகால சூழ்நிலையைப் பொறுத்து இந்தப் பணிகள் விரைவுப்படுத்தப்படும்.