புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் செயல்பாட்டை புதுச்சேரி மாநில ஆட்சியர் அருண் தொடங்கிவைத்தார்.
அதுமட்டுமின்றி இயந்திரங்களை பார்வையிட்டும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக தற்போது பயிலும் மாணவியர்களுக்கு நலப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதால், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இணையதள தொடர்பு செயலியையும் மாவட்ட ஆட்சியர் அருண் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பசுமையை காக்க 2,250 மரக்கன்றுகள் நட்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்!