ETV Bharat / bharat

ஹைபர்சோனிக் தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ.

ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்புப்படை விமானத்தை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

DRDO
DRDO
author img

By

Published : Sep 7, 2020, 3:42 PM IST

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு எனப்படும் டி.ஆர்.டிஓ.(DRDO) தயாரித்த ஹைபர்சோனிக் அதிவேக விமானத்தின் சோதனை இன்று ஒடிசாவில் உள்ள கலாம் தீவில் நடைபெற்றது. HSTDV (Hypersonic Technology Demonstrator Vehicle) என்ற இந்த விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஸ்காரம்ஜெட் உந்துவிசையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றியடைந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்த வெற்றியில் பங்களிப்பாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகள், இந்த சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது. பிரதமரின் கனவான தற்சார்பு இந்தியா என்ற பாதையில் இது முக்கிய மைல்கல் எனத் தெரிவித்துள்ளார்.

HSTDV பரிசோதனை

20 நொடி நேரத்தில் 32.5 கிலோ மீட்டர் உயரத்தை ஹைப்பர்சோனிக் வேகத்தில் எட்டக்கூடிய ஆளில்லா விமானமான HSTDVவை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

இதையும் படிங்க: மேக் இன் இந்தியா திட்டத்திற்கான அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளோம் - பிபின் ராவத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.