ஆந்திர மாநிலம் கர்னூலில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஆய்வு மையத்தில் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் எடை குறைந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது. முற்றிலும் பீரங்கி சாராத மனித முயற்சியில் ஏவப்படும் இந்த வகை ஏவுகணையை மூன்றாவது முறையாக ஏவி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வெற்றி கண்டுள்ளது. பாறை இடுக்குகள் கொண்ட மலைப்பகுதியில் நடைபெற்ற இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது. MPATGM என்ற வகை ஏவுகணை ஏவப்பட்ட சில விநாடிகளில் இலக்கைக் குறிவைத்து தாக்கி வெடித்துச் சிதறியது.
இந்தச் சோதனை முயற்சி இந்திய பாதுகாப்புப் படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு ஏவுகணை சோதனையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் நிலவும் சூழலில் இந்திய பாதுகாப்புப் படை புதிய நவீன யுக்திகளை கையாண்டு எதிரி நாடுகளுக்கு சவாலாக உள்ளது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.