கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்துவருகிறது. அம்மாநில பாஜக தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இவர்கள் அண்மையில் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலமைச்சர் எடியூரப்பாவை தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகா அரசு நிர்வாகத்தையும் கரோனா தடுப்பு நடவடிக்கையிலும் கவனம் செலுத்தவும், அதிருப்பதி எம்.எல்.ஏ விவகாரத்தை கவனம்கொள்ள வேண்டாம் என எடியூரப்பாவுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் கட்சி மேலிடம் அனைத்து நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்கு மாநிலங்களவை, சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அதிருப்தி கோஷ்டி சர்ச்சையை கிளப்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஏமாற்றத்திற்குரிய ஓராண்டு' - மோடி 2.0வை விமர்சித்த காங்கிரஸ்