ETV Bharat / bharat

பிரியாணியில் விஷம் கலந்துகொடுத்து நாய் கொலை! - dog murdered in puducherry

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் பகுதியில் பொமரேனியன் நாய் ஒன்று குரைத்து தொந்தரவு செய்ததால் அடையளம் தெரியாத நபர்கள் சிலர் பிரியாணியில் விஷம் வைத்த கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்
நாய்
author img

By

Published : Oct 15, 2020, 8:12 AM IST

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் ஏனழ மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மோகன். செல்ல பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனது இல்லத்தில் பொமரேனியன் நாய் ஒன்றை வளர்த்துவந்தார்.

இந்நிலையில் அந்தப் பாதையாக சென்றவர்களை அந்நாய் குரைத்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், விஷயம் கலந்த பிரியாணியை நாய்க்கு கொடுத்துள்ளனர். அதனைச் சாப்பிட்ட நாய் சிறிது நேரத்தில் இறந்துபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், இதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் ஒதியன்சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதுகுறித்து மோகன் இல்லத்தின் அருகில் வசிக்கும் பெருமாளை என்பவரை, காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் புதுச்சேரியில் அரசு கால்நடை மருத்துவமனையில், பொமரேனியன் நாயின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: திரையரங்குகள் திறக்க அனுமதி - கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.