நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை 2020, சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக, கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பாதகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின்போது திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உடன் இருந்தனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வாசகங்களுடன் முககவசம் அணிந்திருந்தனர்.
இதுகுறித்து திமுக எம்.பி. கெளதம் சிகாமணி, "கரோனா காரணமாக பல மாணவர்கள் நீட் தேர்வுக்குச் சரியாகத் தயார் ஆக முடியவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு மாணவர்கள் தேர்வு மையங்களுக்குக்கூட செல்ல முடியவில்லை" என்றார்.
கரோனாவுக்கு இடையே பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மழைக்கால நாடளுமன்ற கூட்டத்தொடர் இன்று (செப். 14) தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை 14 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இதையடுத்து நாடளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே திமுக, கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது!